2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

’கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண பத்திரம் கையளிப்பு’

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 மார்ச் 28 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வெற்றியீட்டிய ஏழு உறுப்பினர்களும் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியிடம் தமது சத்தியப்பிரமாண பத்திரத்தை இன்றைய தினம் கல்முனை மாநகர சபை செயலகத்தில் வைத்து கையளித்துள்ளனர்.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரனுடன் கே.விஜயரட்ணம், பொன் செல்வநாயகம், கே.சிவலிங்கம், என்.இராஜரட்ணம், எஸ்.குபேரன், கே.மகேந்திரன் ஆகியோர் தமது சத்தியப்பிரமாண பத்திரத்தை கையளித்தனர்.

இதன்போது எதிர்வரும் ஏப்ரல் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வு நடைமுறை உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆணையாளர் லியாகத் அலியுடன் இவர்கள் கலந்துரையாடினர்.

அதேவேளை கல்முனை மாநகர சபையின் ஆட்சியமைப்பு விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரனிடம் இங்கு வைத்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, இது தொடர்பில் தாங்கள் தீர்க்கமான முடிவொன்றை எடுத்திருப்பதாக குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X