Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
நடராஜன் ஹரன் / 2018 நவம்பர் 19 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட குப்பைகள் கடந்த காலங்களில் கண்ணகிபுரம் பகுதியிலேயே கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு வந்தன. எனினும், யானைகளின் வருகை காரணமாகவும் கண்ணகிபுர மக்களது எதிர்ப்புக் காரணமாகவும், அங்கு குப்பைகளை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைடுத்து, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், மாவட்ட உதவி ஆணையாளரின் அறிவுரைக்கு அமைவாக, அக்கரைப்பற்று, பள்ளக்காட்டுப் பகுதியில் தற்காலிகமாகக் கொட்டப்பட்டு வருகின்றன.
இதற்காக, ஆலையடிவேம்பு பிரதேச சபை, மாதாந்தம் 70 ஆயிரம் ரூபாயை, அக்கரைப்பற்று பிரதேச சபைக்குச் செலுத்திவந்தது.
எனினும், இப்பிரச்சினைக்கு நிரந்தரத்திரமாக ஆலையடிவேம்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சாகாமம் பெரியதுலாவையில் அமைந்துள்ள அரசாங்கக் காணியொன்று அடையாளப்படுத்தப்பட்டு குப்பைகளைக் கொட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் க.பேரின்பம் தெரிவித்தார் .
மேற்படி இடத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கான அனுமதியை, பிரதேச செயலகத்தில் கேட்டுள்ளதாகவும் அவர்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் இதனால், பிரதேசபை வருடமொன்றுக்கு அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு கொடுத்து வந்த சுமார் எட்டு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயை இனிமேல் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியுமெனவும் அவர், மேலும் தெரிவித்தார் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago