Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 29 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
திருக்கோவில், கஞ்சிகுடிச்சாறு குடிநீர் திட்ட ஆராய்வு கூட்டம், மூன்றாவது தடவையும் தீர்மானமின்றி நிறைவு பெற்றது.
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு குளத்தின் புனரமைப்புத்து குடிநீர் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக ஆராயும் மூன்றாவது கூட்டம் நேற்று (29) மாலை நடைபெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஒழுங்கமைப்பில், அம்பாறை மாவட்டச் செயலாளர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையில், திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.
கஞ்சிகுடிச்சாறு குளத்தை புனரமைத்து, அதன் ஊடாக திருக்கோவில் பிரதேச மக்களுக்கான சுத்தமான குடிநீரை தொடர்ச்சியாக வழங்கும் நோக்குடன், சுமார் 2400 மில்லியன் ரூபாய் நிதியொக்கிட்டில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதை முன்னெடுப்பது தொடர்பாக அப்பகுதி விவசாகளுக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், முதலாவது மற்றும் இரண்டாவது கூட்டங்களில் கஞ்சிகுடிச்சாறு விவசாய அமைப்புக்களின் எதிர்ப்புக் காரணமாக தீர்மானமன்றி கூட்டங்கள் நிறைவு பெற்றிருந்தன.
இந்நிலையில், மேற்படி இரு கூட்டங்களிலும் ஆரோக்கியமான தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில், மூன்றாவது கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, கஞ்சிகுடிச்சாறு விவசாயிகள் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு இருந்ததுடன், விவசாய அமைப்புக்களில் இருந்து இருவர் மாத்திரம் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்ததை அடுத்து திருக்கோவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக விவசாயிகள் அணிதிரண்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதேவேளை அங்கு அமையின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு, விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு, கூட்டம் அமைதியாக முன்னெடுக்கப்பட்டது.
மாவட்டச் செயலாளர், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர், கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள், காஞ்சிகுடிச்சாறு இராணுவ முகாம் அதிகாரி, கமநல சேவைகள் திணைக்கள அதிகாரி தமது கருத்துகளை தெரிவித்தனர்.
விவசாயிகளும் தமது பக்க நியாயங்களை முன்வைத்து, கஞ்சிகுடியாறு குடிநீர் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, றூபஸ் குளத்தைப் புனரமைத்து குடிநீர் திட்டத்தை முன்னெடுக்குமாறு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கஞ்சிகுடிச்சாறு பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, துறைசார் அதிகாரிகளுக்கு மாவட்டச் செயலாளர் பணிப்புரை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
5 hours ago
8 hours ago
22 Dec 2024