2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

குடி நீர் விற்பனை தடை

Janu   / 2023 ஜூலை 12 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனைப்  பிராந்திய  சுகாதார  சேவைகள்  பணிப்பாளர்  அலுவலகத்திற்குட்பட்ட உணவகங்கள்,  ஹோட்டல்கள்  மற்றும்  விற்பனை நிலையங்களில்  போத்தலில்  அடைக்கப்பட்ட  குடி நீர்  விற்பனை தடை  செய்வதற்கு  நடவடிக்கை  எடுக்கப்பட்டு  வருவதாக,  கல்முனை பிராந்திய  சுகாதார  சேவைகள்  பணிப்பாளர்  வைத்திய  கலாநிதி  டாக்டர்  ஐ.எல்.எம்.  றிபாஸ்  புதன்கிழமை (12)  தெரிவித்தார்.

ஹோட்டல்கள்  மற்றும்  உணவகங்கள்  ஆகியவற்றில்  போத்தலில்  அடைக்கப்பட்ட  குடி நீர்  விற்பனை  செய்யப்பட்டு  வருகின்றது.  இக்  குடி நீரை  அருந்துந்துவதால்  உடல்  நலத்திற்கு உகந்தது  அல்ல  எனவும்  தெரிவித்தார்.

ஹோட்டல்கள்  மற்றும்  உணவகங்களுக்கு  வரும்  பொது  மக்களுக்கள்  கிணறுகள், குழாய்கள் மூலம்  பெறப்படும்  நீரை  அருந்துமாறு   கேட்டுள்ளார்.

அக்கரைப்பற்று,  சம்மாந்துறை , பொத்துவில்  மற்றும் கல்முனை  ஆகிய  நகர் பிரதேசங்களிலுள்ள  உணவுகையாளும்  நிலையங்கள்  மற்றும்  உணவகங்கள்  பொதுச்சுகாதார  பரிசோதகர்  குழுவினால்  பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட்டு  வருவதாகவும்  கூறினார்.

போத்தலில்  அடைக்கப்பட்ட  குடி நீர்  விற்பனை  தொடர்பாக  சுகாதார  பரிசோதகர்  குழுவினால்  பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட்டு  பரிசோதனை  குழுவின்  அறிவுரைக்கமைய  அதற்கெதிராக  செயற்படுபவர்களுக்கு  எதிராக  சட்ட  நடவடிக்ககை  எடுக்கப்படுமெனவும்  தெரிவித்தார்.

பொதுச்சுகாதார  பரிசோதகர்  குழுவினரால்  உணவகங்கள்  தொடர்ச்சியாக  பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு  வருவதாகவும்  இது  தொடர்பாக  உணவகங்கள்  மற்றும்  வியாபர  உரிமையாளர்கள்,  உணவு  பரிமாறுவோர்  ஆகியோருக்கு  இவை  தொடர்பான  அறிவுறுத்தல்கள்  வழங்கப்பட்டு  வருவதாகவும்  தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X