2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

கிழக்கு முதல் மேற்கு வரை கையழுத்து

Editorial   / 2022 மார்ச் 02 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

நுவரெலியா மாவட்டத்துக்காக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 05 புதிய பிரதேச செயலகங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையோடு மலையக அரசியல் அரங்கம் "கிழக்கு முதல் மேற்கு" வரையில் கையெழுத்து சேர்க்கின்றது.

அக்களப்பணிக்கு  வலு சேர்க்கும் முகமாக நேற்று (01) மாலை அக்கரைப்பற்றிலும் கையெழுத்து சேர்க்கும் பணி நடைபெற்றது.

அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், அரசியல் விமர்சகருமான சிறாஜ் மஸ்ஹூரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.  

மலையக அரசியல் அரங்கின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜா, பிரதான அமைப்பாளர் பீ.கே. ரவி, முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் விமர்சகர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், இலக்கியவாதிகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டு, கையெழுத்தையிட்டு தனது ஆதரவை வழங்கினார்கள்.

மலையக அரசியல் அரங்கின் பிரதான அமைப்பாளர் பீ.கே. ரவியிடம் அக்கரைப்பற்றில் எடுக்கப்பட்ட கையெழுத்துப் பத்திரத்தை நிகழ்வின் ஏற்பாட்டாளரும், முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான சிறாஜ் மஸ்ஹுர் கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X