2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

கிழக்கு ஆளுநர் அக்கரைப்பற்றுக்கு திடீர் விஜயம்

Freelancer   / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்

அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். 

குறித்த விஜயத்தின் போது, அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் செயற்பாடுகளை கண்காணித்ததுடன், குறித்த வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள புனர்வாழ்வு மையம் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். 

குறித்த கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸின் பிரதிநிதியாக பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.ஏ வாஜித் பங்குகொண்டதுடன், குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகள் மற்றும் அவசியம் தேவையான வளங்கள் பற்றியும் தெளிவுபடுத்தினார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .