Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூன் 02 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.சகாதேவராஜா, ஹஸ்பர், எஸ்.எல்.நௌபர்)
நாட்டில் நிலவும் சமகால பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முகமாக இந்திய அரசினால் இலங்கைக்கு ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அவற்றில், அம்பாறை மாவட்டத்திற்கு 50 ஆயிரம் அரிசிப்பொதிகள் வந்து சேர்ந்தன.
இதேவேளை, சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கிவ் ஜென்கொங் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார். சமகால இடர் நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சீன நாட்டு உதவியாக 2500 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் இன்று வசதி குறைந்த பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன் பிரகாரம் மூதூரில் உள்ள 3625 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதியான 10kg அரிசிப்பொதியும், 300 குடும்பங்களுக்கு 1kg நிறை கொண்ட பால்மா பொதியும் வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், திருகோணமலை மாவட்டத்தில் வருமானம் குறைந்த 546 வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் ஆரம்பகட்ட நிகழ்வு இன்று(02) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் டீ.ர்.N.ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago