2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கிலிருந்து வேண்டுகோள்

Princiya Dixci   / 2022 ஜூலை 14 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, பாறுக் ஷிஹான்

சர்வ கட்சி அரசாங்கத்தில், புதிய ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸவும், பிரதமராக அநுரகுமார திஸநாயக்கவும் நியமிக்கப்பட வேண்டுமென, அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை மக்கள் ஜனநாயக கட்சிகளின் தலைவர் எஸ். லோகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் விசேட அதியுயர் பீட கூட்டம், கல்முனையில் உள்ள தலைமை செயலகத்தில்  நேற்று (13) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் போராட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ விரட்டி அடிக்கப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர் ஆகியோர் நியமிக்கப்படுதல் வேண்டும்.

“நாம் அடையாளம் கண்ட வகையில் சஜித் மற்றும் அநுரகுமார ஆகியோர் இந்நாட்டை தலைமை ஏற்று நடத்துவதற்கு மிகப் பொருத்தமானவர்கள்.

“சஜித் ஜனாதிபதியாகவும், அநுர பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று நாம் முன்மொழிகின்றோம். இதற்காக ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலகி, வழி விட வேண்டும்.  

“இந்த அரசாங்கத்தை தீர்மானிக்கின்ற சக்திகளாக போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் இருந்து இயங்குதல் வேண்டும். அதேபோல் வட, கிழக்கிலும் இவ்வாறான மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

“வட,கிழக்கு மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்ற குறுகிய சுய இலாப தலைமைகளை விரட்டி அடிக்க வேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X