2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காரைதீவில் மூடப்பட்ட பாடசாலைகள் இன்று திறப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கல்முனை சுகாதாரப் பிராந்தியத்திலுள்ள காரைதீவில் ஏழு மாணவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மூடப்பட்ட மூன்று பாடசாலைகளும் இன்று (08) திறக்கப்பட்டதாக காரைதீவுப் பிரதேச சுககாதார வைத்தியஅதிகாரி டொக்டர் தஸ்லிமா பசீர் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கையாகவே இப்பாடசாலைகள் மூடப்பட்டதாகவும் அதன்பிறகு எந்தவொரு மாணவருக்கும் தொற்று ஏற்படவில்லை எனவும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் யாரும் அஞ்சத்தேவையில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

குறித்த பாடசாலைகளுக்கு நேற்று (07) சுகாதார வைத்திய அதிகாரிபணிமனையால் தொற்று நீக்கி வீசப்பட்டது.

ஜனவரி மாதம் 29ஆம் திகதி தொடக்கம் ஒருவார காலத்துக்கு இம்மூன்று பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .