2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

காரைதீவில் 196 வேட்பாளர்கள் களத்தில்

Freelancer   / 2023 ஜனவரி 24 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி சகாதேவராஜா

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபைத் தேர்தலுக்காக 12 கட்சிகளும் இரண்டு சுயேட்சை அணிகளும் களமிறங்கியுள்ளன.  11உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 196 வேட்பாளர்கள் களத்தில் இறங்கி உள்ளனர். காரைதீவு வரலாற்றில் இதுவே ஆகக் கூடிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தேர்தலாக உள்ளது.

 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி , தேசிய மக்கள் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய 12 கட்சிகள் போட்டியிடுகின்றன.

 செல்வநாயகம் ரசிகரன் தலைமையிலான சுயேட்சை குழு, அப்துல் மஜீத் யாஹிர் தலைமையிலான சுயேட்சைக் குழு ஆகிய இரண்டு சுயேட்சை அணிகளும் போட்டியில் நிற்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X