2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போன பெண் விபத்தில் சிக்கினார்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

காணாமல் போன பெண் ஒருவர் விபத்தில் சிக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஏ.எஸ்.சித்தி நழீபா எனும் ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர், கடந்த 23ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.

இவ்வாறு காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க குடும்பத்தார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், காணாமல் போன தாய் இரண்டு நாட்களுக்கு முன்னர் கல்முனை - அட்டப்பளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து, கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அப் பெண்ணின் கணவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X