Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் மீண்டும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நற்பிட்டிமுனை மற்றும் அஸ்ரப் நகர் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லையால் மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.
மாலை மற்றும் இரவு வேளைகளில் கிராமங்களுக்குள் உட்புகும் யானைகளால் குடியிருப்பு பகுதி மற்றும் சிறுபோக நெற்செய்கை நிலங்கள் பெருமளவான பயன்தரும் மரங்களையும் பயிர்களையும் அழித்து வருகின்றனர.
இந்தப் பகுதிகளில் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களில் யானை வெடிகளை வனஜீவராசி திணைக்களம் பொதுமக்களுக்கு வழங்கியது.
எனினும், யானைகளின் அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமே உள்ளதுடன், யானைகளைக் கட்டுப்படுத்துவதுக்கு மாற்று வழியை ஏற்படுத்தித்தருமாறும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago