2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2022 மார்ச் 22 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளாறு மயில்லோடை வயல் பகுதியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறை, விளினையடியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய மேற்படி குடும்பஸ்தர், நேற்று (21) வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே, யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X