Editorial / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், நடராஜன் ஹரன்
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இல்மனைட் அகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்த அப்பிரதேசத்திலுள்ள பொது அமைப்புகளால் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“திருக்கோவில் பிரதேசத்தைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 8 மணிக்கு இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
தம்பிலுவில் மற்றும் தம்பட்டை பிரதேச பொதுமக்கள், ஆதவன் பொது விளையாட்டு மைதானத்துக்கும், திருக்கோவில் பிரதேச பொதுமக்கள் திருக்கோவில் மணிக்கூடுக் கோபுரத்துக்கும், விநாயகபுர பிரதேச பொதுமக்கள், விநாயகபுர பஸ் தரிப்பிடத்திலும் ஒன்று சேர்ந்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
பிரதான வீதி ஊர்வலமாக திருக்கோவில் பிரதேச செயலகத்தை நோக்கி வந்தடைந்து, தங்களின் மகஜரையும் செயலாளரிடம் கையளிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025