2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

Editorial   / 2018 நவம்பர் 17 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி மூடப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலை, கலாசார, பிரயோக விஞ்ஞான மற்றும் இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழிப் பீடங்கள், கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (19) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.

ஏற்கெனவே விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மாணவர்கள், நாளை (18) பிற்பகல் 5 மணிக்கு முன்னர்  சமுகமளிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

பொறியியல் பீட கல்வி நடவடிக்கைகள், கடந்த புதன்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பகடிவதையில் ஈடுபட்ட குற்றத்துக்காக, பல்கலைக்கழகத்திலிருந்து வகுப்புத் தடை விதிக்கப்பட்ட, தகவல் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவர்களை மீளவும் சேர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி, மாணவர்கள், நிர்வாகக் கட்டடத்துக்குள் புகுந்து, அதனை ஆக்கிரமித்ததனால் ஏற்பட்ட அமையின்மையினாலேயே சகல பீடங்களும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .