Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, கல்முனை பிரதேச மின் பொறியியலாளர் பிரிவில், அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர், இன்று (05) அறிவித்தார்.
இதற்கமைய, நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட சம்மாந்துறை, அட்டாளைச்சேனை மற்றும் கோணவத்தை, காரைதீவு சில பகுதி, சாய்ந்தமருது சில பகுதி, மளிகைக்காடு பிரதேசத்தில் நாளை 07ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளது.
நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட உதுமாபுரம் சில பகுதி, நிந்தவூர் பிரதேசத்தில் 10ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும் மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளது.
கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட வீரச்சோலை, சொறிக் கல்முனை சில பிரதேசங்களில் 21 ஆம், 26ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும் மின் தடைப்படும்.
கல்முனை, நிந்தவூர் ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட வீரச்சோலை, சொறிக் கல்முனை சில, அட்டாளைச்சேனை, கோணவத்தை பிரதேசங்களில் 24ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின் தடைப்படும்.
சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அம்பாறை, சம்மாந்துறை பிராதன வீதி, பல்கலைக்கழகம் மற்றம் தொழில்நுட்பக் கல்லூரி பிரதேசங்களில் 28ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையும் மின் தடைப்படுமென அறிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago