2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

கல்முனையில் மருந்து தட்டுப்பாடு இல்லை

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 18 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடுகள் ஏற்படவில்லையென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ், இன்று (18) தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகளுக்கான தட்டுப்பாடு தவிர்க்க முடியாத அளவில் ஏற்பட்டுள்ள இச்சூழலில், கல்முனை பிராந்தியத்தை பொறுத்த மட்டில் மிகுந்த சிரத்தையோடு இம்மருந்து தட்டுப்பாட்டை பொதுமக்களுக்கு பங்கம் ஏற்படாத வகையில் முன்கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தார்.

வைத்தியசாலைகளில் இதுவரை மருந்து தட்டுப்பாடு ஏற்படவில்லையெனவும், அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் அதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும், நோயளிகளுக்கு கிரமமான முறையில் மருந்துகள் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

எவ்வாறான இடர்கள் ஏற்பட்டாலும் வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் வழமை போன்று வழங்கப்படுமெனவும், இதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளிகள் எவ்வித தயக்கமும் கொள்ள வேண்டாமெனவும் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X