2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

கல்முனையில் நிவாரணப் பணம் வழங்கி வைப்பு

Freelancer   / 2022 ஜூன் 05 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.அப்ராஸ்)

உலக வங்கியின் நிதி பங்களிப்பில் சமுர்த்தி பெறுகின்ற மற்றும் சமுர்த்தி பெற தகுதியான குடும்பங்களுக்கு அதிகரிக்கப்பட்ட நிவாரணமாக பணம் வழங்கும்  நிகழ்வு கல்முனையில்  நேற்று முன்தினம் (03) இடம்பெற்றது

கல்முனை சமுர்த்தி வங்கியில் வங்கியின் முகாமையாளர் மோசேஸ் புவிராஜ் அவர்களின் தலைமையில், இடம்பெற்ற இக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில்,

கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர்  ஏ.ஆர்.எம்.சாலிஹ், கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா, சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா, சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளர் எம்.ஐ.எம்.முஜீப்,  சமுர்த்தி வலய உதவியாளர் ஜ.எல்.அர்சடீன், சமுர்த்தி வங்கி வலய உத்தியோகத்தகர்கள், சமுர்த்தி பயனாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X