2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

கலை மன்றங்களை பதிவு செய்தலும் புதுப்பித்தலும்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 14 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலை மன்றங்களை 2023, 2024, 2025ஆம் வருடங்களுக்கு புதிதாக பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் அறிவித்துள்ளார்.

கலை மன்றங்களை பதிவு செய்வதற்காக பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் 2017ஆம் காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட 'கலை மன்றங்களை பதிவு செய்வதற்கான விதிமுறைகள்' என்பவற்றுக்கு அமைய வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்தை இம் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த பிரதேச செயலக காலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டக் கலாசார உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைத்தல் வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கலாசார உத்தியோகத்தர்கள், வெளிக்கள வேலைகளில் கலைமன்றங்களை மேற்பார்வை செய்தல், கலைமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் என்பன முன்கூட்டியே தங்களது நிகழ்ச்சி திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X