2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Freelancer   / 2022 ஜூலை 16 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கனகராசா சரவணன்) 

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பனங்காடு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலையம் ஒன்றில் வைத்து இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட கத்திகுத்து தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய குமாரசிங்கம் சிறிதரன் என்பவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கடந்த மாதம் 14 ஆம் திகதி குறித்த ஆலயத்தில் வருடாந்த ஊற்சவத்தின் போது இருவருக்கிடையே காவடி தொடர்பான வாக்குவாதம் முற்றியதையடுத்து,  27 வயது இளைஞன் ஒருவர் மீது 17 வயதுடைய சிறுவன் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளான்.

இதனையடுத்து, காயமடைந்தவரை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட 17 வயது சிறுவனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த தாக்குதலில் காயமடைந்தவர் வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X