2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

கதிர்காம உற்சவம்: விசேட பஸ் சேவை ஆரம்பம்

Princiya Dixci   / 2022 ஜூலை 28 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

கதிர்காம ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டி, இன்று வியாழக்கிழமை (28) முதல் தினமும் காலை 08 மணிக்கு கிரமமாக கல்முனையிலிருந்து கதிர்காமத்துக்கு இலங்கை போக்குவரத்துச் சபையின்  பஸ்கள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, கல்முனை சாலை முகாமையாளர் வி. ஜௌபர் தெரிவித்தார்.

கதிர்காமத்துக்குச் செல்லும் பயணிகள் முன்கூட்டியே ஆசன பதிவை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்  பஸ்ஸை முன் கூட்டியே குழுவாகப் பதிவு செய்தால் தனி பஸ்ஸை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

கதிர்காமத்திலிருந்து கல்முனைக்கு கிரமமான முறையில் மாலை 04 மணிக்கு பஸ் சேவைகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து பஸ் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமெனவும் கூறினார்.

தீர்த்தத்தில் கலந்துகொள்ளும் அடியார்களை அழைத்து வர கூடுதலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

அத்துடன், உகந்தைக்கான பஸ் சேவை தினமும் காலை 07 மணி தொடக்கம் 10 மணி வரை  04 பஸ் சேவைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X