2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

கண் சத்திர சிகிச்சை உபகரணம் அன்பளிப்பு

Princiya Dixci   / 2022 மார்ச் 17 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை உபகரணம் ஒன்று, அனைத்துலக மருத்துவ நல அமைப்பினால் ( IMHO)அன்பளிப்புச் செய்யப்பட்டது.

நீண்ட காலமாக கண் சத்திர சிகிச்சைக்காக கண் துல்லியமாக அளவிடும் டிஜிட்டல் இயந்திரம் இல்லாமையால் பல சிரமங்களை நோயாளிகள் எதிர்நோக்கிவந்தனர்.

 இதனை கருத்தில்கொண்டு, கண் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் டொக்டர் என்.நிரோஷனின் வேண்டுகோளுக்கு இணங்க, கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் இரா. முரளீஸ்வரனின் நீண்ட நாள் முயற்சியின் பயனாக, அனைத்துலக மருத்துவநல அமைப்பிலிருந்து 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான கண் வில்லை துல்லியமாக அளவிடும் டிஜிட்டல் இயந்திரம் கிடைக்கப் பெற்றது.

இதனை அனைத்துலக மருத்துவநல அமைப்பு (அமெரிக்கா) சார்பாக இருதய நோய் வைத்திய நிபுணர் டொக்டர் அருள்நிதி ,வைத்திய அத்தியட்சகர் டொக்டர் இரா.முரளீஸ்வரனிடம் கையளித்தார்.

மேலும், இவ் "அனைத்துலக மருத்துவநல அமைப்பு" (IMHO) பல்வேறு இலவச கண் சிகிச்சை முகாம்களை இவ் வைத்தியசாலையில் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X