2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

கட்டுப்பாடுகளுடன் எரிபொருள் வழங்கல்

Editorial   / 2022 மார்ச் 02 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் எரிபொருட்கள் வழங்கப்பட்டு வருவதுடன், சில இடங்களில் “இல்லை” என்ற வாசகத்தால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், தற்போது மின்சாரம் சுழற்சி முறையில் தடைப்படுவதாலும் எரிபொருள் நிலையங்கள் சில மூடப்பட்டுள்ளன.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்பதால், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு பொலிஸார்  நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட சமயங்களில்  எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நின்ற வரிசைகளை விட  தற்போதே நீளமான வரிசைகளில் மக்கள் நிற்பதை அவதானிக்க முடிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X