Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Princiya Dixci / 2022 மே 11 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
அக்கரைப்பற்று கடற்கரைப் பகுதியை அண்டிய மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் இன்று(11) அதிகாலை வேளை கடல் நீர் புகுந்தமையால் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பதற்ற நிலையும் ஏற்பட்டது.
அக்கரைப்பற்று மீரா நகர்ப் பிரதேசத்தில் வழமைக்கு மாறாக கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்து, கடல் நீர் கடற்கரையில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள நிலப் பகுதிக்குள்ளும் மக்கள் குடியிருப்புப் பிரதேசத்துக்குள்ளும் புகுந்தது.
கடல் நீர், கடற்கரைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பிரதான காபட் வீதியையும் தாண்டி, நிலப்பரப்பில் புகுந்தமையினால் கடற்கரையில் தரத்து வைக்கப்பட்ட படகுகள், சிறிய ரக வள்ளங்கள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் போன்றன கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், அதிகாலை 04 மணியளவில் நிகழ்ந்த இந்நிலைமையைப் பார்வையிட பெருந் தொகையான மக்கள் அப்பிரதேசத்தை நோக்கிப் படையெடுத்தனர்.
இச் செய்தி அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகள் முழுவதும் பரவியமையால், கடற்கரையை அண்டி வாழும் மக்களும் அச்சத்துக்குள்ளாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago