2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

கடலில் இளைஞர்கள் இருவர் மாயம்

Princiya Dixci   / 2022 மே 11 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ், பாறுக் ஷிஹான்

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை கடற்கரையில் நேற்று (10) மாலை 4 இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில், இரு இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து பொதுமக்கள் குறித்த இளைஞர்களை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்  இரு இளைஞர்களையும் காப்பாற்ற முடியவில்லை. தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபட்டனர். 

கடல் நீரில் குளித்த மற்றய இரு இளைஞர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (11) காலை குறித்த பகுதிக்கு கடற்படையினர் வருகைதந்து தேடுதலில் ஈடுபட்டனர். எனினும், காணாமல் போன இளைஞர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவ்வாறு காணாமல் போயுள்ள பயறூஸ் யஸீத், உபைதுல்லாஹ் அதீப் என்ற இரு இளைஞர்களும் உயர்தரப் பிரிவில் முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் 17 வயது நிரம்பிய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X