Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
எஸ்.கார்த்திகேசு / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில், இன்று (16) முதற்கட்டத் துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த மாவீரர் துயிலும் இல்ல துப்புரவுப் பணிகள், திருக்கோவில் பிரதேச மாவீரர் குடும்பங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டதோடு, மேற்படி துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியில் காணப்பட்ட பற்றைப்புதர்களை அகற்றி, விழுந்து கிடந்த நினைவுச் சுடர்களை நிறுத்தி வைத்து, துப்புரவுப் பணிகளை முன்னெடுத்தனர்.
இம்மாவீரர் துயிலும் இல்லத்தில், எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி, மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவே, இச்சிரமதானப் பணிகள், பெற்றோரால் முன்னெடுக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நினைவுச்சுடர்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago