2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

ஓட்டோ விபத்து; சிறுமி உட்பட நால்வர் காயம்

Princiya Dixci   / 2022 மார்ச் 29 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் எரிபொருள் தாங்கியுடன் (பவுசர்) ஓட்டோ ஒன்று, நேற்றிரவு (28)  விபத்துக்குள்ளாகியது.

அக்கரைப்பற்றில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஓட்டோவும் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த சாய்ந்தமருது பெற்றோல் முகவர் நிலைய அதிபர் ஒருவருக்கு சொந்தமான எரிபொருள்  தாங்கியும் (பவுசர்)  நேருக்கு நேர் மோதியதிலையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது  ஓட்டோ பலத்த சேதத்துக்கு உள்ளாகியதுடன், ஓட்டோவில் பயணித்த சிறுமி உட்பட நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X