Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2022 ஜூலை 07 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலமாக அடுத்த இரு வருடங்களுக்கு இடையில் கஷ்ட நிலைமையில் இருந்து முழுமையாக மீள முடியுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஆலையடிவேம்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், “இது நாட்டுக்கும், மக்களுக்கும் மிகவும் கஷ்டமான காலம்தான். இந்நிலைமைக்கு அரசாங்கத்தின் மீது பழியை போட்டு, குறை கூறி கொண்டே இருப்பதால் எந்த தீர்வும் வானத்தில் இருந்து வந்து விட போவதில்லை.
“ஆனால், அனைவரும் ஒன்றுபட்டு அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலம் எதிர்வரும் இரு வருட காலங்களுக்குள் முழுமையாக மீட்சி பெறலாம் என்பது திண்ணம் ஆகும்.
”விரைவில் யூரியா உரம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகளுக்கு சலுகை விலையில் வழங்கப்படும். இதில் எந்தவித முறைகேடுகளும் இடம்பெற கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஏதேனும் முறைகேடுகள் இடம்பெறுகின்ற பட்சத்தில் அதிகாரிகளுக்கும், எமக்கும் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும்.
“எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை உண்மையிலேயே பெருங்கவலை தருகின்றது. என் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்கூட எரிபொருள் நெருக்கடிக்கு உட்பட்டு. ஆனால், கூடுமான விரைவில் எரிபொருள் நெருக்கடிக்கும் தீர்வு எட்டப்படும்.
“அதே போல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரித்துள்ளன. அதற்கும் உரிய தீர்வு பெற்று தரப்படும். மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago