2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

ஐஸூடன் இளைஞன் கைது

Janu   / 2025 ஜனவரி 06 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம்  இறக்காமம் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட வாங்காமம் பிரதேசத்தில்  ஞாயிற்றுக்கிழமை(5)   மாலை இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மற்றும் சம்மாந்துறை விசேட அதிரடிப் படையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  வாங்காமம் பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன் சந்தேக நபர் உள்ளிட்ட சான்று பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக  இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X