2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

எரிவாயுவுக்காக காத்திருந்த மக்கள்; ஏமாற்றம் அடைந்தனர்.

Freelancer   / 2022 ஜூன் 02 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(காரைதீவு நிருபர் சகா)

நேற்று முன்தினம் முதலாம் திகதி எரிவாயு பெறுவதற்காக 10 மணி நேரம் காத்திருந்து ஏமாற்றமடைந்த மக்கள் மனம் விரக்தியுடன் மனம் வெதும்புகிறார்கள்.

காரைதீவு விபுலானந்த மைதானத்தில் சுமார் 1000 தமிழ் முஸ்லிம் மக்கள் பத்து மணி நேரம் காத்திருந்து அதுவும் முதலாம் திகதியன்று ஏமாற்றம் அடைந்தனர்.

"அக்கரைப்பற்று சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் அங்குள்ள முகவர்கள் இன்று எரிவாயு வழங்கப்படமாட்டாது என்று கூறியது போன்று,  இந்த பிரதேசங்களில் உள்ள  முகவர்களும் அப்படி சொல்லியிருந்தால் நாங்கள் பத்து மணி நேரம் கொளுத்தும் வெயிலில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அரசாங்கம் தான் எங்களை வதைக்கிறது என்றால் எரிவாயு முகவர்களும் எங்களை வதைக்கிறார்கள் இதற்கெல்லாம் இறைவனின் தீர்ப்பு உண்டு" என்று மக்கள் மனக் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல்,  ஊடகங்கள் கூட எங்களை கண்டு கொள்வதில்லை ஏனைய இடங்களில் இடம் பெறும் சம்பவங்கள் காட்டப்பட்டு கொண்டிருக்கின்றது,  ஆனால் நாங்கள் இங்கு பத்து மணிநேரம் காய்ந்து கருவாடாகி கூடியிருக்கிறோம். எங்களை ஊடகங்களும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையை அளிக்கின்றது என்று அந்த மக்கள் தெரிவித்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X