Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2018 ஜனவரி 06 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருக்கோவில் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தால் நடத்தப்படும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் சேவை நேரம் அதிகரிக்கப்படவேண்டுமெனவும் மேலுமொரு நிலையத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், திருக்கோவில் தேவசேனாதிபதி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் வரையான 47 கிலோமீற்றர் தூர இடைவெளியில் அமைந்துள்ள ஒரேயொரு எரிபொருள் நிரப்பும் நிலையம் இதுவென்பதுடன், இந்நிலையத்தின் சேவை விஸ்தரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையத்தின் மூலம் அதிகளவான அரச உத்தியோகத்தர்களும் விவசாயிகளும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் எரிபொருளைப் பெற்று வருகின்றனர்.
எனினும், இந்நிலையத்தில் ஒரேயொரு ஊழியரே கடமையாற்றுகின்றாரெனவும் பெற்றோல், டீசல், மண்ணெண்னை ஆகிய அனைத்து விநியோகத்தையும் அவரே மேற்கொள்வதாகவும் இதனால் காலையில் கடமைக்குச் செல்லும் அரசஉழியர்களும் மக்களும் எரிபொருள் நிரப்புவதற்கு காத்திருக்க வேண்டிய ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
மேலும், இந்நிலையம் காலை 6 மணி முதல் மாலை 7 வரையே திறந்திருப்பதாகவும் இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் அவ்வமைப்பு குறிப்பிடுகின்றது.
ஆகவே, இந்நிலையத்தின் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, பொருத்தமான பிரதேசத்தில் மேலுமொரு எரிபொருள் நிலையத்தை அமைக்க உரிய அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
28 minute ago
37 minute ago