Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2024 ஜூலை 12 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
இன்று பாராளுமன்றத்தில் மொட்டு கட்சியானது எட்டு பிரிவுகளாக உடைந்து சின்னாபின்னம் ஆகிவிட்டது. எனவே, அந்தக் கட்சிக்கு ஒருபோதும் தலை தூக்க முடியாது. அதை பிரதிநிதித்துவம் படுத்தக்கூடிய அங்கத்தவர்களாகிய நீங்கள், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து இருப்பது எங்களுக்கு ஒரு பெரிய பலம் சேர்த்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பியான அசோகா அபேசிங்க தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் மாற்றுக் கட்சிஆதரவாளர்கள் சுமார் ஆயிரம் பேர். ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
“மாற்றத்திற்கான ஆரம்பம், சவால்களை எதிர்கொள்ள தயார்” எனும் தொனிப் பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியினால் அம்பாறை நகர சபை கேட்போர் கூடத்தில் காலை 10 மணியளவில் மொட்டு கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர், ஏனைய கட்சியினர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் பகிரங்கமாக இணைக்கும் செயற்பாடானது நடைபெற்றது .
ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், மாவட்ட ஐக்கிய இளைஞர் சக்தியின் செயலாளரும், ஐக்கிய கல்வி அபிவிருத்தி குழுவில் இணைப்புச் செயலாளருமான வெள்ளையன் வினோகாந்த் தலைமையில், தமன பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் வெணூர பிரகித், மற்றும் உகன பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திரகுமார ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
அங்கு முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் துணை பொதுச்செயலாளர் ஆகிய அசோகா அபே சிங்க கூறுகையில், ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி வாகை சூடுவதற்கான சகல வழிமுறைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதுடன், சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாவதை யாராலும் தடுக்க முடியாது என்பது தெரிந்ததே.
அம்பாறை மாவட்டத்தின் வெற்றியானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே சந்தர்ப்பத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து எமது கட்சியுடன் இணையக்கூடிய ஒவ்வொருவருடைய எதிர்கால பொறுப்புகளையும் இக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற ரீதியில் நான் நிச்சயமாக ஏற்பேன். மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இன்று இணைந்து கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் இணைய உள்ளனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
27 minute ago