Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 நவம்பர் 27 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
அம்பாறை மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இப் பேரனர்த்தத்திற்கு காரணமான உழவு இயந்திரம் மற்றும் அதன் பெட்டி கனரக இயந்திரம் மூலம் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டன. இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற காரைதீவுக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன், காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.
முப்படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். விமானப்படை விமானமும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.
எனினும் இதுவரை ( பகல் ஒரு மணி வரை) இரண்டு சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. மேலும் நால்வர் இன்னமும் மாயமாகியுள்ளனர். தேடுதல் தொடர்கிறது.
காரைதீவு மாவடிப்பள்ளி பிரதான வீதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய எட்டு மதரசா மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளத்தில் செவ்வாய்க்கிழமை அள்ளுண்டமை தெரிந்ததே.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago