Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
பைஷல் இஸ்மாயில் / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு, சரியான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதையே, நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என்று, அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாநாகரசபையின் கேட்போர் கூடத்தில், இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற பொது தேர்தலில், தலைவர் அதாவுல்லாவையும் தோல்வியடையச் செய்ததன் மூலம், முஸ்லிம் மக்களே, உண்மையில் தோல்வியடைந்தனர் என்று கூறிய அவர், முஸ்லிம்களுக்கு எதிரான, சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் கூட்டு சதி வலையில் சிக்கியே, எம்முடைய மக்கள் பலிகடாக்கள் ஆகிவிட்டனர் என்றும் கூறினர்.
இந்தச் சதியில் சிக்கிவிடவேண்டாம் என்று, தலைவர் அதாவுல்லா கூறியிருந்த போதும், உண்மையை உண்மையாகவே உணர்ந்த மக்கள், நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மூலம், தேசிய காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைமையையும் வெற்றிபெறச் செய்துள்ளனர் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago