2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

‘உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட 37 பெண்கள் தயார்’

Editorial   / 2017 நவம்பர் 13 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜன் ஹரன், எம்.எஸ்.எம். ஹனீபா

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களுக்கான சமய சமூக பண்பாடு பொருளாதார அபிவிருத்திக்கான அமைப்பு, அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக, பெண்களுக்கான சமய சமுக பண்பாடு பொருளாதார அபிவிருத்திக்கான அமைப்பின் தலைவி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (13) அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார் நிலையில் 37 பெண்கள் உள்ளனர். நாம் கட்சிசார்பற்ற அமைப்பு. எனவே, எமது கொள்கைகளை ஏற்றுக்கொண்ட எந்தக் கட்சியுடனும்  கூட்டுச்சேர்ந்து போட்டியிடுவோம். அது அவர்களுக்கு வலிமை. தவறினால் சுயேச்சையாகப் போட்டியிடுவோம். எம்மைச் சேர்க்கும் கட்சி, நிச்சயம் வெற்றியடையும்.

“எமது அமைப்பானது 3,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு இயங்கிவருகின்றது. 24 நிறைவேற்று உறுப்பினர்கள் உள்ளனர். சமூகத்திலுள்ள பிரச்சினைகளைத் தேவைகளைப்  பெண்கள்தான் அறிவார்கள். எனவே, எமது பயிற்றப்பட்ட பெண்பிரதிநிதிகள் தேர்தலில் நின்கக் காத்திருக்கின்றனர்.

“உள்ளூராட்சித் தேர்தலில் 25 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை நாம் கவனமாகக் கையாளவேண்டும்.

“எந்தக்கட்சி வேண்டுமானாலும் எம்முடன் தொடர்புகொண்டு எமது வலுவான பெண் வேட்பாளர்களை இணைத்துக் கொள்ளலாம்.

“அதுமட்டுமல்ல சிறந்த வலுவான வாக்குவங்கி எம்மிடமுண்டு. நாம் எமது அமைப்பின் கோட்பாடுகளுக்கமைவாக சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அரசியல்கட்சியுடன் இணைந்துபோட்டியிடுவோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .