2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

உலமா கட்சி குற்றச்சாட்டு

பைஷல் இஸ்மாயில்   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்குகளைப் பெறும் நோக்கில் சாய்ந்தமருது மக்களுக்கு போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டு, இம்மக்களின் உணர்வுகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் விளையாடுவதாக, உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குற்றஞ்சாட்டினார்.

உள்ளுராட்சிசபை விடயமாக இப்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு, உலமா கட்சியின் கல்முனை தலைமையக காரியாலயத்தில் நேற்று (28) இடம்பெற்றபோது, அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இப்பிராந்திய மக்களின் அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாயையில் இருந்து மீள்வதின் ஊடாகவே அடைந்துகொள்ள முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .