2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

உறுதி வழங்குமாறு மகஜர்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்து அஷ்ரப் நகரில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கு, பூரண உரிமை ஆவணம் வழங்குமாறு, அஷ்ரப் நகர் கிராம அபிவிருத்தி அமைப்பின் தலைவர் ஆதம்லெப்பை றிஸ்வான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சுனாமி அனர்த்தத்தில் ஒலுவில் கிராமத்தில் 4ஆம், 6ஆம், 7ஆம் பிரிவுகளில் கரையோரத்தில் வசித்த சுமார் 65 குடும்பங்கள், அஷ்ரப் நகரில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

“கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் வீடுகள் நிர்மாணிக்கப்பட்,டு இதுவரையும் மீள் குடியேற்ற வீட்டு உரிமையாளர்களுக்கு, காணி உறுதி வழங்கப்படாததால் குடியிருப்பாளர்கள் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

“அத்தோடு, சரியான முறையில் அடயாளம் இடுவதற்கும் சுற்றி வர வேலி அமைக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எனவே, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் காணி உறுதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .