Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜனவரி 14 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
“உரிமைகளை மீட்க முடியாத போலி அரசியல் கட்சிகளை தோற்கடிப்போம்” என்று, காணி உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் செயலணியான காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி, இன்று (14) விடுத்துள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“எமது சமூகம் ஏமாற்றப்படுகின்றது. உரிமைகள் மறுக்கப்படுகின்றது. மக்களே விழித்தெழுங்கள். கடந்த தேர்தல் காலங்களில் அளித்த பொய் வாக்குறுதிகளை மீண்டும் சுமந்து கொண்டு, தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
“அம்பாறை மாவட்டத்தில் உள்ள வேகாமம், பாலையடிவட்டை, கோமாரி, கிரான் பொன்னன்வெளி, ஒலுவில் அஷ்ரப் நகர், நுரைச்சோலை வீட்டுத் திட்டம், கீர்த்துப்பற்று அம்பலத்தாறு உட்பட எட்டு பிரச்சினைகளுடன் கடந்த காலத்தில் உயிர்களையும் உடமைகளையும் இழந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றினைந்து, செயலணியாய் எடுத்துவந்த முயற்சிகளை யாவரும் அறிவீர்கள்.
“இப்பிரச்சினைகளை உடனடியாக நாங்கள் தீர்த்துத் தருகின்றோம் என்ற கூறிய கட்சிகள் 01 வருடமாகியும் எவ்வித முன்னேற்றமின்றி இருக்கின்றன.
“இம்மாத முடிவுக்குள் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு தர வேண்டும். இதனை எந்தக் கட்சி செய்து வழங்குகின்றதோ அந்தக் கட்சியை அதிகாரத்தில் அமர்த்த பாதிக்கப்பட்ட நாம் தயாராகவுள்ளோம்.
“நாம் இழந்த காணிகளுக்கும் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இதுவரை ஆறுதல் தீர்வு கூட கிடைக்கவில்லை. எம்மை ஏமாற்றியது போதும், இன்னும் இன்னும் ஏமாற்றாமல் ஒதுங்கி நின்று முயற்சிக்கும் மக்களுக்கு வழி விடுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இன்று சிலர், இனத்துக்குத் துரோகம் செய்யும் பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதைப் பார்க்கின்றோம். பணத்துக்காகவும் ஏனைய சலுகைகளுக்காகவும் ஏனைய குழுக்களுடன் இணைந்து செயற்படுவதையும் காண்கின்றோம்.
“ஆனாலும், காரைதீவு பிரதேச சபையில் அதிக ஆசனங்களை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெறும் என்பதை 10ஆம் திகதி அறிவோம். காரைதீவு மக்கள் தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்கள். தேசியத்தில் உறுதிப்பாடுடையவர்கள். அம்பாறை மாவட்டத்தில் பெருமையை ஏற்படுத்தித் தருகின்ற கடமைப்பாடு உடையவர்கள். இவர்களின் செயற்பாடு ஏனையவர்களுக்கும் அடிப்படையாக இருக்கும்.
“வட, கிழக்கு இணைந்து சுயாட்சியை கொண்டுவருவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக இருக்கின்றது. அவ்வாறான ஆட்சியை கூட்டமைப்பு கொண்டுவரும். இன்று இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஒரு சுயேற்சை குழுவாலோ அல்லது பெரும்பான்மை கட்சிகளாளோ அது முடியுமா என சிந்தித்து பாருங்கள்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025