2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

உமி அடுப்பினால் தீ விபத்து; மூன்று வீடுகள் சேதம்

Princiya Dixci   / 2022 மே 31 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை, சாய்ந்தமருது-02 ஆம் பிரிவு சாஹிரா கல்லூரி வீதியில் வீடொன்றில் நேற்று (30) திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.

வீடொன்றில் மதிய உணவு சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் மண்ணெண்ணெயை உமி அடுப்பில் ஊற்றும் போது தீ மேலெழுந்து, வீட்டினுள் காணப்பட்ட வைக்கோலில் திடீரென தீ பரவியதால் அவ் வீட்டில் இருந்த உடைமைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

அத்துடன், குறித்த வீட்டுக்கு அருகில் இருந்த இரு வீடுகளும் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

 சம்பவ இடத்துக்கு விரைந்த கல்முனை மாநகர தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X