2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

இளம் சந்ததியினரை வாசகராக மாற்ற கண்காட்சி ஏற்பாடு

Editorial   / 2022 மார்ச் 09 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

இலங்கையின் முதலாவது வழக்கறிஞரான எம்.சி. சித்திலெப்பையினால் எழுதப்பட்ட சஞ்சிகைகள் மற்றும் அவர் பற்றி எழுதிய நூல்கள் தொடர்பான கண்காட்சி, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாக நூலகத்தில் இன்று (08) நடைபெற்றது.

இளம் சந்ததியினர் மத்தியில் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு, தென்கிழக்குப் பல்கலைக்கழக நான்காம் வருடத்தில் மொழித்துறை பிரிவில் சிறப்புக் கலைமாணி கற்கை நெறியினை பயிலும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சி கூடத்தை, பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் திறந்து வைத்தார்.

வளரும் இளம் சந்ததியினரை சிறந்த வாசகராக மாற்றவும், அவர்கள் மூலம் வாசிப்பை வளர்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், வாசிப்பின் மகத்துவத்தை ஊக்கப்படுத்தும் வகையில், உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களையும், அவர்களின் படைப்புகளையும் எடுத்துரைக்கும் நோக்கில் இக் கண்காட்சி அமையப் பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பீடாதிபதி எம்.எம். பாசில், பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், கலை மற்றும் கலாசார பீடத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எஸ்.எப் ஸாதியா, பல்கலைக்கழக நூலகர் எம்.எம். ரிபாயுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X