Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
எஸ்.கார்த்திகேசு / 2017 டிசெம்பர் 27 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வு வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதனால் திருக்கோவில் கரையோரப் பிரதேசம் பாரிய அழிவுகளை சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் இதனை உடனடியாக அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து, திருக்கோவில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பேரணியாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம், 'திருக்கோவில் பிரதேசத்தினை காப்போம் - மாபியாக்களை விரட்டுவோம்” எனும் தொனிப்பொருளில் இன்று (27) இடம்பெற்றது.
தம்பட்டடை, தம்பிலுவில் மக்கள் தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு மைதானத்திலும், திருக்கோவில் மக்கள் திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் முன்பாகவும், விநாயகபுரம் மக்கள் விநாயகபுரம் பேரூந்து தரிப்பிடம் ஆகிய டூன்று இடங்களில் கூடி மேற்குறிப்பிட்ட இடங்களில் இருந்து பேரணியாக வந்,து திருக்கோவில் மணிக்கூட்டுகோபுர சந்தியில் ஒன்றுகூடிய 3,000க்கும் மேற்பட்ட மக்கள், வீதிகளின் இருமருங்கிலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனிடம் மகஜர் ஒன்றினை, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டோர் கையளித்திருந்ததுடன், திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குச் சென்று, பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனிடமும் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக சுமார் இரண்டு மணித்தியாலயங்களுக்கு மேலாக திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் வாகன நெரிசல் காணப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
35 minute ago
1 hours ago
3 hours ago