Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 மார்ச் 03 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை பிரதேசதத்தில், டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடங்களை வைத்திருந்த நபர்களுக்கு, சம்மாந்துறை நீதவான், நேற்று (02) பிடியாணை பிறப்பித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை சம்மாந்தறை சுகாதார வைத்தியதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்களும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, டெங்கு நுளம்பு பரவக் கூடிய வகையிலும், சுகாதாரத்துக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய வகையிலும் இடங்களை வைத்திருந்த இருவர் இனங்காணப்பட்டனர். இவர்களுக்கெதிராக சம்மாந்தறை நீதவான் நீதிமன்றில் சுகாதார வைத்தியதிகாரியினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கு விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (02) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் நீதிமன்றத்துக்குச் சமூகமளிக்காததனால், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எச்.எல். நஸீல் பிடியாணை பிறப்பித்து, உடனடியாக உரிய நபர்களைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago