2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

இரு பிள்ளைகளை கொன்ற தந்தை

Editorial   / 2024 மார்ச் 14 , பி.ப. 01:19 - 0     - 228

தனது இரு பிள்ளைகளையும் படுகொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்க்க முயன்ற தந்தை காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் அம்பாறை, பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இவ்வனர்த்தம், வியாழக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.

  மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்று விட்டே, தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார். இதன்போது படுகாயமடைந்த அவர், கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  படு காயமடைந்த முஹம்மது மிர்சா முகமது கலீல் (வயது-63)   சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோர்   உயிரிழந்தவர்களாவர். அந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்து விட்டார்.

சம்பவம்  தொடர்பில்  பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில்    சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பாறுக் ஷிஹான்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X