Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஜூலை 12 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு, சவூதி அரோபியாவின் நிதியுதவியுடன் நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளையும் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட இன விகிதாசாரத்துக்கமையவே கையளிக்க வேண்டுமென, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான சிராஜ் மஷ்ஹூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில், இன்று (12)அவா் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“விகிதாசாரத்துக்கு அமையவே, இவ்வீடுகளைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென, உச்சநீதிமன்றத் தீர்ப்பு க்கூறுகின்றது. ஆனால், எந்த இன விகிதாசாரம் என்று அத்தீர்ப்பில் வரையறுக்கப்படவில்லை.
“எனவே, அக்கரைப்பற்று பிரதேச இன விகிதாசாரத்தைக் கடைப்பிடிக்கும் வகையில், சட்ட நுணுக்கங்களைக் கையாள வேண்டும்.
“கடந்த காலங்களில், லஹூகல பிரதேசத்தில் மிகக் குறைதளவானனோரே (03 பேரளவில்) சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்தும், 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதேபோன்றுதான், சுனாமியால் பாதிக்கப்படாத அம்பாறைப் பகுதியில் 10க்கு மேற்பட்ட சுனாமி வீடுகள் அதிகாரிகளின் செல்வாக்கில் நிர்மாணிக்கப்பட்டன.
இவ்வாறு, கல்முனை, நிந்தவூர், ஆலையடிவேம்பு போன்ற பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு, அதே பிரதேச செயலகத்துக்குட்பட்ட இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டன.
“ஆனால், அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு, அதே பிரதேச செயலகத்துக்குட்பட்ட நுரைச்சோலையில் வீடுகள் வழங்கப்படுவதை மட்டும், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவதன் மர்மம் என்ன என” அவரால் கேட்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
39 minute ago
25 Apr 2025
25 Apr 2025