2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

ஆறாவது ஆண்டு நிறைவு

Princiya Dixci   / 2022 மார்ச் 15 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

திருகோணமலை, மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி பயிலும் டயமன் விசேட தேவையுடையோர் பாடசாலையின் 6ஆவது ஆண்டு நிறைவு விழா, அப்பாடசாலையின் ஸ்தாபகரும் அதிபருமான மூதூர் பிரதேச சபை உறுப்பினர் அகீதா தலைமையில், இன்று (15) நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம் ஐய்யூப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, தனவந்தர்களின் ஒத்துழைப்புடன், விசேட தேவையுடைய மாணவர்களுக்கு சீருடைகளை அன்பளிப்புச் செய்தார்.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபை தவிசாளர்  எம் எம் ஏ அரூஸ், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் முக்தார், சட்டத்தரணி எம். ஹனான், ஓய்வுபெற்ற அதிபர் மஃரூப், விசேட தேவையுடையோர்கள் பாடசாலையின் ஆசிரியர்களான நகோஸ்வரன் தக்சிகா, தமிழ் செல்வன் வினித்திரா, பிராந்திய பிரமுகர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X