2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்க விண்ணப்பம்

Princiya Dixci   / 2022 மார்ச் 14 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பட்டதாரி பயிலுநர்களாக பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளை கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை 3-i(அ) தரத்துக்கு மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம். கோபாலரெத்தினம், இன்று (14) தெரிவித்தார்.

2020 பட்டதாரிகளை தொழில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பயிலுநர்களின் 2020.01.01ஆம் திகதியிலிருந்தும், 2021.01.01ஆம் திகதிக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளின் 2019.12.31ஆம் திகதிக்கு 35க்கு குறைவாக கருதப்படும்.

பட்டதாரிகளை தொழில்களில் ஈடுபடுத்தும் செயற்றிட்டம் - 2020 இன் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரியாகவும், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 'பட்டதாரி பயிலுநர்களுக்கு அரச நிறுவனங்களில் பயிற்சி வழங்குதல்' திட்டத்தின் கீழ் பட்டதாரி பயிலுநராக பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, 01.01.2020 மற்றும் 01.01.2021ஆம் திகதியிலிருந்து அபிவிருத்தி உத்தியோகத்தராக நிரந்தர நியமனம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

பட்டதாரிகளை தொழிலில் ஈடுபடுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் 2020, 2019 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட டிப்ளோமாதாரியாக இருத்தல் வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள், இம்மாதம் 31ஆம் திகதி முன்னர் செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம், 198, உட்துறைமுக வீதி, திருகோணமலை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X