2025 ஜனவரி 09, வியாழக்கிழமை

அம்பாறையில் புதிய கட்சியை தொடங்க முனைப்பு

Editorial   / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தில் விரைவில் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக நாபீர் பௌண்டேஷன் தவிசாளர் கலாநிதி உதுமானக்கண்டு நாபிர் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “அம்பாறை மாவட்டத்தில் அரசியல் அறிவு ரீதியாக பாரிய பின்னடைவு இருக்கிறது. அதனால் எமது மக்களுக்கு எவ்வாறான அரசியல் தலைமைத்துவங்களை உருவாக்கலாம் என்பது தொடர்பில் நாபீர் பௌண்டேஷன் ஊடாக ஒவ்வொரு ஊருக்கும் சென்று சமூக அமைப்புக்களை நாடி, தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.

“அதனூடாக, அம்பாறை மக்களுக்கு ரிஷாட், ஹக்கீம், அதாஉல்லா போன்றவர்களால் எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை என்பதை அறிந்துள்ளோம்.

“அரசியல் செய்வது, தேர்தல் நடத்துவது எல்லாம் மக்களின் நன்மைக்கே. கடந்த காலங்களில் நாங்கள் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் பல வேலைத்திட்டங்களை செய்து வந்தோம்.

“நாபீர் பௌண்டேஷன் இயங்கிவந்த எங்களின் அமைப்பை, எதிர்வரும் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சியாக மாற்றியமைத்து, பொதுத் தேர்தல், மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் களமிறங்க தயாராகி வருகிறோம். கூட்டிணைந்தா அல்லது தனித்தா என்பதை காலமே தீர்மானிக்கும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X