2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையில் பயிர்களைத் தாக்கும் நோய்கள் அதிகரிப்பு

Freelancer   / 2023 ஜனவரி 25 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ் டீன்

அம்பாறை  மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் தற்போது வேளாண்மை குடலைப் பருவமாகவும், கதிர் விரியும் நிலையிலும் இருந்து வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில், வேளாண்மை வளர்ச்சி குன்றியும் மஞ்சள் நிறமாகவும் மாறி வரும் நிலை, ஒரு வகை நோய்த்தாக்கமாக இருக்கும் என பங்கசு, கிருமி நாசினிகளை விவசாயிகள் விசிறி வருகின்றனர்.

இவைதவிர, அறக்கொட்டியான் பூச்சியின் தாக்கம், ஈ பூச்சியின் தாக்கம் என பல்வேறு நோய்கள் நெற்செய்கைக்கு ஏற்பட்டுவருகிறது. இதனால், விவசாயச் செய்கை பெரிதும் பாதிப்படைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

பொருளாதாரப் பிரச்சினை, கொரோனா முடக்கம் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து, கடன்பட்டு விவசாயம் மேற்கொண்ட விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. 

இன்னும் சில நாள்களில்  அறுவடை இடம்பெறவுள்ள நிலையில், நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் எனவும் அம்பாரை மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X