2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

அம்பாறையிலும் கையெழுத்து வேட்டை

Freelancer   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்து போராட்டத்தின் ஓரங்கமாக இன்று  அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.

இன்று  காலை 10 மணியளவில் காரைதீவு பொதுச்சந்தைக்கு முன்னால் கையெழுத்து வெட்டை இ.த.அ.கட்சி மாவட்ட அமைப்பாளரும் காரைதீவு தவிசாளருமான கி.ஜெயசிறில் தலைமையில்  ஆரம்பமாகியது.

அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா..அரியநேத்திரன் ஞா.சிறிநேசன் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் உள்ளிட்ட பிரமுகர்கள் முதலில கையெழுத்திட்டனர்.

உங்கள் ஒவ்வொருவரினதும் கையொப்பங்களும் உங்கள் பாதுகாப்புக்கானதும் உங்கள் சந்ததியின் பாதுகாப்புக்கானது ஆகும் என இ.த.அ.கட்சி மாவட்ட அமைப்பாளரும்  தவிசாளருமான கி.ஜெயசிறில் தெரிவித்தார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X