2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

’அந்தி பூத்த வைகறை’ கவிதை நூல் வெளியீடு

Editorial   / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

ஒலுவில் எஸ்.ஜலால்டீன் எழுதிய 'அந்தி பூத்த வைகறை' கவிதை நூல் வெளியீட்டு விழா, அட்டாளைச்சேனை அல்-ஷகி வரவேற்பு மண்டபத்தில் இன்று(27) இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, கவிதை நூலை வெளியீட்டு வைத்தார்.

 இந்நிகழ்வின்போது இலக்கிவாதிகள், நிர்வாக சேவை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட துறைசார் முக்கியஸ்தர்கள் பலர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

செய்னம்பு ஹூசைமா வெளியீட்டகத்தால் இக்கவிதை நூல் வெளியீடு வெளியிட்டு வைக்கப்பட்டது.

 இதன் போது விழா தொடர்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் கலைஞர் ஏ.எல்.அன்ஸார் சிறப்புரை நிகழ்த்தியதுடன், நூல் மீதான உரையை இலக்கிய ஆய்வாளர் எம்.அப்துல் றஸாக், விமர்சகர் சிறாஜ் மசூர்,  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை தலைவர் கலாநிதி எஸ்.எம்.ஐயூப் உள்ளிட்ட இலக்கியவாதிகளால் நிகழ்த்தியதோடு கலை, கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X